Android

[Android][bsummary]

MOBILES PHONES

[MOBILES PHONES][bsummary]

Security

[Security][bsummary]

CARS

[CARS][grids]

BIKES

[BIKES][grids]

Business

Header Ads

Apple Anniversary

Apple நிறுவனம் தனது முதல் போனை 2007 ஆம் ஆண்டில் வெளியிட்டது.கடந்த பத்து ஆண்டுகளுக்கு பிறகு தனது புதிய மாடல்களை Steve Jobs பெயரில் கட்டப்பட்ட apple ன் தலைமையகத்தில் வெளியிடுதல் போன்ற பல பல எதிர்பார்ப்புகளுக்கு பிறகு Tim Cook விழா மேடைக்கு வந்தார்.


Apple ன் விழா மேடையில் Tim Cook,Steve Jobs ஐ நினைவுகூரும் வகையில் உரையாற்றினார் அதற்கு பின்னர் Steve Jobs தலைமையகத்தின் சிறப்பமச்சங்களை விளக்கினார்.அதற்கு பின்னர் apple watch 3 அறிமுகப்படுத்தப்பட்டது.இதற்கு முன்னர் அறிமுக படுத்தப்பட்ட apple வாட்சுகளில் இல்லாத அளவிற்கு பல முன்னேற்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டதாகவே apple watch 3 அமைந்துள்ளது.இதை ஒரு குட்டி மொபைல் போனாகவே மாற்றி இருக்கிறது அதாவது மொபைல் போன்களில் செய்யக்கூடிய அணைத்து வேலைகளையும் இதில் செய்து கொள்ளலாம் என்பது போல் அமைந்துள்ளது.இதில் சிம் கார்டு பொருத்தி கொள்ளும் வசதியும் உள்ளதால் போனிகளில் வரும் அழைப்புகளை மேற்கொள்ளலாம் .இதில் பொருத்தப்பட்டிருக்கும் சென்சார்கள் மூலமாக உடலின் செயல்பாடுகளை கணிக்கவும் முடியும் Airpods ஐ பயன்படுத்தி பாடல்களையும் கேட்கலாம் மற்றும் wifi,blutooth என பல சிறப்பம்சங்கள் இதில் அடங்கும்.இதை full சார்ஜிங் செய்து இரண்டு நாட்களுக்கு பயன்படுத்தலாம் இதன் விலை 21000 மற்றும் 25000 என இரு வகைகளில் அடங்கும்.

இதற்கடுத்ததாக apple tv ன் சிறப்புகளை காண்போம்.இதில் 4K HDR வீடியோக்களை காணலாம் A10X பிராசஸர் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது இதன் மூலம் இவற்றின் திறன் இரு மடங்காக உள்ளது.iTunes ல் இருக்கும் HD வீடியோக்களை டவுன்லோடு செய்து 4K தரத்தில் காணலாம்.

பிறகு iphone 8 ஐ அறிமுகத்திற்கு முன்னரே Steve Jobs ன் கண்டுபிடிப்புகள் சாதனைகள் மற்றும் தொழில்நுட்ப உலகில் அவை கொண்டு வந்த மாற்றங்கள் என பலவற்றை Tim Cook பேசினார்.இவற்றிற்குப்பிறகு iphone 8 மற்றும் iphone 8 பிளஸ் ஐ அறிமுகப்படுத்தினார்.

இவற்றின் சிறப்பம்சங்களை காண்போம்
1) 5.5 inch screen
2) Apple A11 Bionic ஹெக்சாகோர் ப்ராசஸர்
3) 12+12 mega pixel பின்புற கேமரா, OIS மற்றும்  2x optical zoom வசதியுடன்.7 மெகாபிக்சல் முன்புற கேமரா.
4) 3 GB RAM  மற்றும் 64/256 GB இன்டர்னல் மெமரி
5) வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் NFC.

 iphone 8 மற்றும்  iphone 8 பிளசில் வயர்லெஸ் சார்ஜிங்,NFC மற்றும்  பிராசஸர் போன்றவைகள் புதிதாக காணப்பட்டாலும் iphone 7 ஐ போன்றுதான் இதுவும் காணப்படுகிறது.

இந்த அறிமுகங்களுக்கு பிறகு நாம் பெரிதும் எதிர் பார்க்கப்பட்ட iphone X பற்றி பேச ஆரம்பித்தார் Tim Cook.இதுதான் இந்த நிகழ்ச்சியின் ஹைலைட்டே. பத்து வருடங்களில் apple கண்டிருக்கும் மிகப்பெரிய மாற்றமே இதுதான் என்றால் ஆச்சர்யப்படுவதற்கில்லை.iphone ற்க்கே உரித்தான வட்ட வடிவிலான Home பட்டன் iphone X ல் வைக்கப்படவில்லை

இவற்றின் சிறப்பம்சங்களை காண்போம்

1) 5.8 இன்ச்  1125 x 2436திரை.        
2) Apple A11 Bionic ஹெக்சாகோர் ப்ராசஸர்.
3) 12+12 மெகா பிக்சல் பின்புற கேமரா. OIS மற்றும்  2x optical zoom வசதியுடன்.7 மெகாபிக்சல் முன்புற கேமரா.
4) iOS11, வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் NFC
5) OLED தொழில்நுட்பம் (முன்புறப்பகுதி மற்றும் விளிம்புகள் வரை திரை ஆதிக்கம் நிறைந்ததாகவே காணப்படும்)

Home பட்டன் இல்லாததால் இதில் பிங்கர் பிரிண்ட் சென்சார் கிடையாது அனால் அதற்கும் ஒரு படி மேலே சென்று iPhone X ஐ அன்லாக் செய்வதற்கு Face ID எனும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது Face ID  மூலமாக முகத்தைப் பயன்படுத்தி ஐபோன் எக்ஸை அன்லாக் செய்ய முடியும். Face ID தொழில்நுட்பத்தில் இருக்கும் Infrared camera,Dot projector,Flood illuminator போன்றவை முகத்தைத் துல்லியமாகப் பதிவு செய்ய பயன்படுகிறது. எனவே, உங்களைப் போன்று வேடமிட்ட ஒருவராலோ அல்லது உங்கள் புகைப்படத்தைக் கொண்டோ அன்லாக் செய்ய முடியாது. இதன் மற்றொரு வசதி இருட்டிலும் கூட உங்கள் முகத்தைப் பயன்படுத்தி அன்லாக் செய்ய முடியும். அதே வேளையில் ஒரே முக அமைப்பைக் கொண்ட  இரட்டையர்கள் பாஸ்வேர்டைப்  பயன்படுத்திகொள்ளலாம் எனப் பரிந்துரைக்கிறது ஆப்பிள்.

டூயல் வெர்டிகள் அமைப்பில் இருக்கும் கேமராக்கள் VR க்கு உதவியாய் இருக்கும். எமொஜியின் அடுத்த கட்டமாக Animoji என்னும் புது வகையிலான எமொஜியை அறிமுகப்படுத்துகிறது ஆப்பிள். இது உங்கள் முகபாவங்களை அப்படியே பிரதிபலிக்கும். இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் Apple A11 Bionic ஹெக்சாகோர் ப்ராசஸர் முந்தைய மாடல்களை விட அதிக வேகத்தில் செயல்படும். முதல் முறையாக இந்த மொபைலில் OLED யை பயன்படுத்தியிருக்கிறது அதுவும் edge to edge திரை என்பதால் சிறந்த திரை அனுபவத்தை பெற முடியும். வயர்லெஸ் சார்ஜிங் மூலமாக வேகமாக சார்ஜ் செய்துகொள்ள முடியும்.

இதன் விலை இந்திய மதிப்பில் 89,000 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செப்டம்பர் 15 முதல் இந்த ஐபோன்களை ஆர்டர் செய்ய முடியும். செப்டம்பர் 22 முதல் இந்த ஐபோன்கள் விற்பனைக்கு வருகின்றன














No comments: