Android

[Android][bsummary]

MOBILES PHONES

[MOBILES PHONES][bsummary]

Security

[Security][bsummary]

CARS

[CARS][grids]

BIKES

[BIKES][grids]

Business

Header Ads

TATA Nexon Car

டாடா நிறுவனம் தனது புதிய ரக கார்களான TATA Nexon ஐ 21.09.2017 அன்று அறிமுகப்படுத்தவுள்ளது.இவற்றின் புக்கிங் ஆர்டர்கள் 11.09.2017 அன்றே துவங்கிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது மற்றும் இதற்கு முன்னரே சில டாடா டீலர்கள் புக்கிங் ஆர்டர்களை துவங்கிவிட்டனர்.இதன் விலை 8 ல் இருந்து 12 லட்சம்  பார்க்கப்படுகிறது.

இவை நான்கு Variants மற்றும் ஐந்து கலர்களில் வெளிவர இருக்கின்றன Variants ன் நான்கு வகைகள் -1)XE 2) XM    3) XT 4) XZ+ மற்றும் ஐந்து கலர்கள்- 1)Moroccan Blue, 2)Vermont Red, 3)Seattle Silver, 4)Glasgow Grey, 5)Calgary White எனவும் அமைந்து உள்ளன. TATA Nexon கார்களை டாடா வலைதளத்திலோ அல்லது டாடா டீலர்களிடமோ 11,000 ரூபாய் செலுத்தி புக்கிங் செய்து கொள்ளலாம்.

டாடா நிறுவனம் தனது nexon காரை ஸ்போர்ட்ஸ் கூபே போல வடிவமைப்பு செய்துள்ளது.அகலமான க்ரில்லின் இருபுறமும் LED DRL பிரஜெக்டர் ஹெட்லைட் அழகாக வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது மாறட்டும் காரின் பக்கவாட்டு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பார்டர்கள் மிகவும் அசத்தலாக காட்சியளிக்கிறது.முன் பக்கத்தை போலவே LED டெயில் லைட்டுகளை  x வடிவ பட்டை ஒன்றிணைகிறது பின்பக்க பம்பரில் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் மற்றும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன  கரை பார்க்கிங் செய்வது ஈசியாக உள்ளது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது 

காரின் உள்பகுதியில் மூன்று அடுக்கிலான டேஸ்போர்ட் உள்ளது  அதன் மேல்பகுதியில் 6.5 இன்ச் Harman இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆண்ட்ராய்டு ஆட்டோ இருக்கிறது இதனுடன், 8 ஸ்பீக்கர்களுடன் கூடிய ஆடியோ சிஸ்டமும் இணைக்கப்பட்டுள்ளது. 

இதுதவிர கிளைமேட் கன்ட்ரோல் ஏசி, புஷ் பட்டன் ஸ்டார்ட், பலவித கன்ட்ரோல்களுடன் கூடிய ஸ்டீயரிங் வீல், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய முன்பக்க இருக்கைகள் மற்றும் 60:40 ஸ்ப்ளிட் பின்பக்க இருக்கை ஆகியவற்றின் குஷனிங் மற்றும் இடவசதி, மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, 31 ஸ்டோரேஜ் ஸ்பேஸ்களைக் கொண்டிருக்கும் நெக்ஸானின் கேபின், ஜெர்மானிய லக்ஸூரி கார்களில் இருப்பதுபோன்ற உணர்வைத் தருகிறது. 


நெக்ஸானில் இருக்கும் புதிய 1.2 லிட்டர் Revotron டர்போ பெட்ரோல் இன்ஜின், 110bhp பவர் மற்றும் 17kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது. இதுவே புதிய 1.5 லிட்டர் Revotorq டீசல் இன்ஜின் என்றால், அது 110bhp பவர் மற்றும் 26kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது. டிரைவிங் மோடுகளைக் (Eco, City, Sport) கொண்டிருக்கும் இந்த இரண்டு இன்ஜின்களும், 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளன.

டியாகோவைப் போலவே, நெக்ஸானிலும் AMT கியர்பாக்ஸை பின்னாளில் அறிமுகப்படுத்தும் முடிவில் இருக்கிறது டாடா. 2 காற்றுப்பைகள், ABS, EBD, Pretensioner & Load Limiter உடனான சீட் பெல்ட், இன்ஜின் Immobilizer, ISOFIX போன்ற பாதுகாப்பு வசதிகள், அனைத்து வேரியன்ட்டிலும் ஸ்டாண்டர்டாக அளிக்கப்பட்டிருப்பது பிளஸ் பாயிண்டாகவே உள்ளது .

இவ்வாறு தனது ஒட்டுமொத்த மாயாஜாலங்களையும் TATA நிறுவனம் தனது Nexon கார்களில் காட்டியிருக்கிறது.











No comments: